தென்னிந்திய சினிமாவில் படங்களில் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகைகள் பலர் கதாநாயகியாக நடித்து வரும் நிலையிலும் அவர்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்போ பிரபலமோ இன்னும் மக்கள் மத்தியில் கிடைக்காத நிலையில் தற்போது திரையுலகில் ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடிக்கும் பட்சத்தில் இளம் ஹீரோயின்கள் திரையுலகில் வெகுவாக பிரபலமாவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் துவக்கத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து பின்னர் படங்களில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல முன்னணி இளம் நடிகை ஜனனி ஐயர் .

இவர் ஆரம்பத்தில் திரையுலகில் நுழைவதற்கு முன்னர் மாடலாக தனது கலைபயனத்தை துவங்கிய இவர் பல முன்னணி விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட மலையாளத்தில் பல படங்களில் நடித்து இருந்த போதிலும் கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் நடிகர் அஜ்மல் அமீர் நடிப்பில் வெளிவந்த திருதிரு துறுதுறு படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை தமிழ் மக்களிடையே அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தின் மூலம் பிரபலமான ஜனனி இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதிலும் பிரபல முன்னணி இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த

அவன் இவன் படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் இவருக்கு பலத்த பாரட்டுகளை பெற்று தந்த நிலையில் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை காரணமாக பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அம்மிணியை தேடிவந்த நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சுட்டிதனத்தாலும் நகைச்சுவையான பேச்சாலும் பலரை மேலும் தனது ரசிகர்களாக உருவாக்கி கொண்டார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்

ஜனனி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது தங்கையுடன் நெருக்கமாக இருக்கும்படியான போஸ் கொடுத்துள்ளார். நம்மில் பலருக்கும் ஜனனிக்கு தங்கை இருப்பதே தெரியாத நிலையில் அவரது பெயர் கிருத்திகா அவர் தற்போது அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்கவுள்ள படத்தில் அவரது தங்கையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares