சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ், சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் அவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.அவர் நடிகர் தினேஷை திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீப காலமாக அவரிடம் இருந்து பிரிந்த வாழ்கிறார். இது தற்காலிக பிரிவு தான் என தினேஷ் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
கணவரை பற்றி பேசாத ரச்சிதா நேற்று பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் ரச்சிதா அவரது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தும்போது அப்பா, அப்பா மற்றும் சகோதரரை பற்றி பேசினார். அவரது பூனைக்குட்டியை பற்றி கூட பேசினார். ஆனால் கணவர் தினேஷை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.
“I fall for people very easily. ஈஸியா நம்பிடுவேன்” என ரச்சிதா ஒரு இடத்தில குறிப்பிடுகிறார். அவரது கணவர் பற்றி தான் மறைமுகமாக அவர் குறிப்பிடுகிறார் போல.அதனால் ரச்சிதா தினேஷ் உடன் பிரிவு நிரந்தரமானது தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்