விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம்.

இதன்படி லொஸ்லியாவிற்கு பிறகு பிக்பாஸ் சீசன் 6 ல் மற்றுமொரு இலங்கை பெண்ணாக ஜனனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை பெண்ணான ஜனனி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நிலையில், இலங்கை மக்களின் ஆதரவும் குவிந்து வருகின்றது.

பொதுவாக பிக் பாஸ் என்றாலே குழந்தை வரைக்கும் பிரபல்யமான ஒரு போட்டி. இந்த போட்டிக்கு போட்டியாளராவது என்பது மிக அரிதான ஒரு விடயம்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் நுழைந்த யார் இவள்? இவ்வளவு அழகின் சிலை எங்கிருந்து வந்துள்ளது? என்று மக்களிடம் எழும் கேள்விக்கு பதிலளிக்கிறது இந்த படைப்பு.
யார் இந்த ஜனனி?

ஜனனி குணசீலன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்கின்றனர். மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

இலங்கையில் பூர்வீக வழியில் வேரூன்றிய வலுவான தமிழ் பின்னணியில் இருந்து வந்தவர், புகழ்பெற்ற தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன் ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என நம்பப்படுகிறது.

ஜனனி ஆர்மி

லாஸ்லியாவை போல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள். அவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares