தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் அதிக ரசிகர்களை கொண்ட மிகவும் எளிமையான நடிகர் என்றால் அது ரசிகர்களால் செல்லமாக தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார் தான் இவரின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த பில்லா திரைப்படத்தை அஜித்தை வைத்து ரீ ரிலீஸ் செய்த பில்லா திரைப்படம் தான் இதில் அஜித்குமார் நயன்தாரா மற்றும் நமிதா என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வெளியானது.
சில நாட்களுக்கு முன் பில்லா திரைப்படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடித்த நடிகை நமீதா அப்போது ஷூட்டிங் போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அஜித் ஷூட்டிங்கின் போது தன உடன் நடிக்கும் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுப்பார் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டதற்கு அப்படியா அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லையே ஒருவேளை நான் இல்லாத போது நடந்திருக்கலாம்.
அவர் பிரியாணி சமைத்து கொடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் இதுவரை அவர் சமைத்த பிரியாணியை நான் சாப்பிட்டதில்லை பில்லா படப்பிடிப்பு முடித்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது அன்றிலிருந்து சரி தற்போது வரை அவரை நான் சந்தித்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார் எனக்கு இது கொஞ்சம் மிகப்பெரிய ஏமாற்றம் தான் என்கிறார்.