உங்க வீட்டு ஹாலில் இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும் அள்ள அள்ள குறையாமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்குமாம்..பொதுவாக ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய பொருட்கள் இருந்தால் அங்கு செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது என்பது சாஸ்திர ரீதியான நம்பிக்கையாகும்.ஒவ்வொரு பொருட்களுக்கும் சில அதிர்வலைகள் உண்டு. குறிப்பாக உயிருள்ள பொருள்களுக்கு அதிகம் அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி உண்டு.

இப்படி நம் வீட்டு ஹாலில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் மூலம் நமக்கு செல்வ செழிப்பும் உண்டாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? அந்த வகையில் இந்த 5 பொருட்களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

அதிர்ஷ்டம் தரும் பொருட்களில் முதல் வகையாக இருப்பது குபேர பொம்மை. வெளிநாடுகளில் மட்டுமல்லாமல், இந்திய நாட்டில் கூட குபேர பொம்மை விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.இந்த பொம்மையை வாங்கி வைத்தால் அதிர்ஷ்டம் வருமா? என்றெல்லாம் தெரியாது. ஆனால் இதனைப் பார்க்கும் பொழுது நமக்குள் மறைந்திருக்கும் புன்னகையும், புத்துணர்வும் தானாகவே வெளியில் வருவதை நம்மால் உணர முடிகிறது.

இந்த குபேர பொம்மையை வடக்குத் திசையாக வைத்து அதன் வயிற்றில் தினமும் தடவி வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.குழந்தைகளுக்கு பணத்தை சேகரிக்கும் உண்டியல் குபேர பொம்மையாக பார்த்து வாங்கி கொடுப்பது இன்னும் சிறப்பு.இரண்டாவதாக உயிருள்ள செடிகள் வீட்டில், ஹாலில் இருப்பது அவ்வளவு விசேஷமான பலன்களைக் கொடுக்கும்.மணி பிளான்ட், கற்றாழை, வாஸ்து ரீதியான செடிகள் போன்ற வீட்டிற்குள் வளர்க்க முடிந்த செடிகளை உங்களால் முடிந்த ஒன்றிரண்டு செடிகளை வளர்த்தால் கூட அதிலிருந்து வரும் ஆற்றல் நமக்கு நேர்மறை சக்தியை கொடுக்கும்.

தினமும் நாம் அதிக நேரம் ஹாலில் தான் புழங்கிக் கொண்டிருப்போம். இங்கு பசுமையான அந்த நிறத்தை கண்கள் வழியாக உள்வாங்கி, மூளைக்கு சென்று நம்மிடம் இருக்கும் நேர்மறை ஆற்றலைத் தூண்டி விடும்.வீட்டிற்குள் இருக்கும் அசுத்த காற்றை நீக்கி ஆக்சிஜனை கொடுக்கக் கூடிய இந்த உயிர் உள்ள செடிகள் அதிர்ஷ்டம் தரும் பொருளாகக் காணப்படுகின்றது.இந்த வகையில் திருஷ்டி கழிக்க கண்ணாடி டம்ளருக்குள் எலுமிச்சையை போட்டு வைப்பது இன்னும் விசேஷம்.

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை முக்கால்வாசி நிரப்பிக் கொண்டு அதனுள் புள்ளிகள் அற்ற சுத்தமான எலுமிச்சை ஒன்றை போட்டு கொள்ள வேண்டும். இதனை வீட்டிற்கு வரும் அனைவரின் கண்களில் படும்படி ஒரு இடத்தில் தொந்தரவு தராமல் வைத்து விடுங்கள்.

எலுமிச்சையை வாரம் ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். இதுவும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி, நேர்மறை ஆற்றலை நிலை பெறச் செய்து செல்வ செழிப்பை உண்டாக்கும் ஒரு பரிகாரமாகும்.அதனால் தான் பெரிய பெரிய கடைகள் முதல் தொழில் செய்யும் இடங்கள் வரை அனைத்து இடங்களிலும் இவ்வாறு செய்து வைக்கப்படுகின்றன.

ஒரு கண்ணாடி பௌலில் கொஞ்சம் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கிராம்பு, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, ஜாதிக்காய், கடுக்காய், பச்சைகற்பூரம் ஆகியவற்றை ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.இதனை வீட்டின் ஹாலுக்கு நடுப் பகுதியில் இருக்கும் மேஜையில் வைக்கலாம் அல்லது எல்லோரும் பார்க்கும் ஒரு பொது இடத்தில் வைக்கலாம்.

குதிரை பொம்மை, யானை பொம்மை, மயில் பொம்மை, விநாயகர் சிலை, மகாலட்சுமி சிலை அல்லது அதிர்ஷ்டம் தரும் மண் பொம்மைகளை, மண் சிலைகளை உங்களுக்கு விருப்பம் போல வாங்கி பெரிதாக வரவேற்பறையில் வைத்து விட்டால் போதும்! அள்ள அள்ள குறையாத செல்வம் மழை தான் பொழிய போகிறது.இதில் உங்களுக்கு பிடித்தமானதை, உங்களுக்கு முடிந்ததை நீங்கள் செய்து ஹாலில் வையுங்கள், பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares