சமையல் செய்தல் என்பது ஓர் அருமையான கலை. அந்தக் கலையை பொழுதுபோக்காக அல்லது முழுநேர வலையாக, குடும்பத்திற்காக செய்யும் பொழுது மனது கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சமைத்த உணவால், பசித்திருப்போரின் பசியை போக்குகையில், உள்ளம் அடையும் திருப்திக்கு இணையே இல்லை எனலாம்.
பொதுவாக சமைக்க தேவையான பொருள்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து உபயோகிப்பீர்; ஆனால், அப்படி கடைகளில் இருந்து வாங்கும் காய்களின் லிஸ்டில் முக்கியமாக இடம்பெறுவது கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற சமையலுக்கு தேவைப்படும் மூலிகைகளே!அவற்றை அதிகமாக வாங்கி வந்தால் வாடிவிடும்; ஆனால், அதன் தேவையின்றி சமையல் நிறைவடையாது. எப்பொழுதும் தேவைப்படும் பொருளாக இந்த சமையல் மூலிகைகள் விளங்குகின்றன.
கொத்தமல்லி அல்லது தனியா என்று அறியப்பட்ட இந்த மூலிகை சமையலின் சுவையை கூட்ட தேவைப்படும் மிக முக்கியமான ஒன்று. இது சமையல் தவிர பிற தேவைகளுக்கும் பயன்படுகிறது; அதாவது அழகைக் கூட்ட, உடலுக்கு குளிர்ச்சியை தர என பல விதங்களில் பயன்படுகிறது. இது வேகமாக வளரக்கூடிய ஒரு மூலிகை தாவரம் ஆகும்.
சரி வாருங்கள் மாடியில் /கொத்தமல்லி வளர்க்கும் முறை பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்த்து பயன்பெறுங்கள்.