பதிவுலகம் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு “பிரபல” “பிரபல” பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த சமையல்களில் ஒன்றை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை டீ குடித்த சில நிமிடங்களில் எழுதத் துவங்குகிறேன்.

தேநீர் பலரது உற்சாக பானமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ உணவில்லாமல் கூட இருந்துவிடுவேன் ஆனால் டீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று சொல்லி ஒரு நாளை ஐந்து டீ பத்து டீ என்று குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வொர்க் டென்சன், தூக்கம் வருது அதனால அப்பப்போ டீ குடிக்கிறேன் என்று தங்கள் வசதிக்கு ஏதேனும் காரணங்களை சொல்லிக் கொண்டு டீயை அளவில்லாமல் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

டீ போடுவது எப்படி?

சுவையான டீயை மிக எளிதாக நீங்களே செய்வதற்கான வழிமுறைகள்.பொதுவாக டீ போடுவதில் இரண்டு வகை உள்ளது. முதல் வகை, வேறு யாராவது செய்திருந்த டீயை வாங்கி கீழே போடுவது.ஆனால் நாம் பார்க்க விருப்பது இரண்டாவது வகை.

அதுவும் டீ தூளில் இதை சேருங்க 6 மாசத்துக்கு அட்டகாசமான டீ குடிக்கலாம் கீழே உள்ள வீடியோ மூலம் அந்த முறையை தெளிவாக தெரிந்து கொண்டு நீங்களும் அசத்துங்கள்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares