நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க தினமும் ஒரு ஒரு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். அந்த வகையில்., கிழங்கு வகைகளுள் ஒன்றாக இருக்கும் கருணை கிழங்கை பற்றி இனி காண்போம்.
வாரத்திற்கு ஒரு முறை கருணை கிழங்கை சாப்பிட்டாலே உடலில் உள்ள பாதி நோய் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். கருணை கிழங்கில் வைட்டமின் சி., வைட்டமின் பி., மக்னீசு., மினரல்., ரிபோபிளேவின்., பொட்டாசியம்., இரும்பு சத்துக்கள் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்களின் மூலமாக நமது குடல் சுத்தம் செய்யப்படுவதோடு உடல் எடையும் குறைக்கப்பட்டு., மூல நோயை தடுக்கிறது.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
பலம் தரும்: கருணைக்கிழங்கின் ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.
மலச்சிக்கல்: உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
வெள்ளைப்படுதல்: பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக் கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.
மூல நோய்க்கு: மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும்.
உடல் எடை குறைய: கருணைக்கிழங்கின் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது.